2023-ல் உங்க ஆரோக்கியம் சிறப்பா இருக்கணுமா? அப்ப இந்த பழக்கங்களை வெச்சுக்கோங்க....
2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். நாம் ஒவ்வொரு புதிய ஆண்டில் நுழையும்
போது, அந்த ஆண்டில் ஒருசில உறுதிமொழிகளை எடுப்போம். அந்த உறுதிமொழிகள்
வேலை தொடர்பானதாக இருக்கலாம்.
அல்லது ஒருவரின் பழக்கவழக்கங்கள் தொடர்பானதாக
இருக்கலாம். எதுவாயினும் தற்போதைய சூழ்நிலையில் நாம் முதலில் நமது
ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் கடந்த
சில ஆண்டுகளாக ஒரு கொடிய வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அந்த வைரஸ் தொற்றிற்கு பின் ஏராளமான மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக
அக்கறையை காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க
வேண்டுமென்று விரும்பினால், அதற்கு ஒருசில உறுதிமொழிகளை எடுங்கள். கீழே
2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க எடுக்க வேண்டிய
சில எளிய உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மன அழுத்தமில்லாத வாழ்க்கை
இன்று பெரும்பாலானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காணம் என்னவென்று
நினைக்கிறீர்கள்? மன அழுத்தம் தான். ஏனெனில் அதிக மன அழுத்தத்தில்
இருக்கும் போது, கட்டுப்பாடின்றி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். அப்படி
தினமும் கட்டுப்பாடின்றி அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக தொப்பை
வருகிறது. இது தவிர மன அழுத்தம் ஒருவரின் மன அமைதியைக் கெடுத்து, பல மோசமான
எண்ணங்களை மனதில் உருவாக்கி, ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும்
சீர்குலைக்கும். எனவே இந்த 2023 புத்தாண்டில் மன அழுத்தத்தில் இருந்து
விலகி இருக்க முயற்சி செய்வோம் என்று உறுதி எடுப்போம்

No comments: