திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. அப்போ விளையாட்டு நகரம்?
திருச்சியில் உலகத்தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் அமைக்கப்பட உள்ள ஒலிம்பிக் அகாடமிகளில் ஒன்று, திருச்சியில் அமைக்கப்பட உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் திறன் வேகமாக முன்னேற்றமடையும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் திருச்சி அருகே விளையாட்டு நகரம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது பன்னாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக்கூடிய வகையில், உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள்
வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழகத்தின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம்
நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக
அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments: